ஸ்ரீவில்லிபுத்தூர்: நகை திருடிய தம்பதிகள். 18 சரவன் பறிமுதல்..

56பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் நகை திருடியதம்பதிகள், 18 சவரன் மற்றும் கார் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் கடந்த மாதம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்க்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் கூட்டம் அதிகமாகவும் நெரிசலாகவும் இருக்கும் இடங்களில் சுமார் ஐந்து பெண்கள் கழுத்தில் அணிந்து இருந்த மொத்தம் 18 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் நகர் காவல் ஆய்வாளர் முத்துகுமார் தலைமையில் தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிசிடிவி பதிவுகளை சேகரித்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்களத்தை சேர்ந்த கரண்(29), இவரது மனைவி அனு ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து 18 பவுன் தங்க நகை மற்றும் காரை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி