வலுவான கூட்டணி அமைத்து 2026-ல் அதிமுக ஆட்சி அமைக்கும். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில்
திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சூளுரைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினார்: - தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலைகளும் கூடுதலாகி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களும் உயர்ந்துள்ளது.
பட்டாசு தொழிலில் உழைத்து சம்பாதித்த பணத்தை, வருமானத்தை மீறிய செலவு இருப்பதால் நல்ல முறையில் முதலீடு செய்ய முடியவில்லை. அதிமுக ஆட்சியின் போதெல்லாம் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தமிழகம் உயர்வுக்கு காரணமாய் இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக எவ்வளவோ போராடினோம்
2026 சட்டமன்றத் த
ேர்தலில் வலிமை கொண்ட துணிவுள்ள கட்சியாக அதிமுக உருவெடுத்து ஜெயிக்கும். தற்போது ஆட்சி எல்லாம் காட்சியாகிவிட்டது.
விளம்பரத்தால் உயர்ந்தது என்றும் நிரந்தரம் அல்ல. எதிர்வரும் சட்டமன்றத்
தேர்தலில் திமுக ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை, தீப்பெட்டி பட்டாசு தொழில் உள்பட அனைத்து தொழிலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார். கூட்டத்திற்கு நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.