ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தெற்குவெங்காநல்லூரைச் சேர்ந்த மதீஸ்வரன் என்பவர் தன் மனைவி ப்ரியாவை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். ப்ரியா ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்குச் சென்று சம்பாதித்து வந்தார். மதீஸ்வரன் தன் மனைவி அதிக நபர்களுடன் செல்போனில் பேசுவதாக சந்தேகித்து, இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து அறிவாளால் வெட்டியுள்ளார்.  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ப்ரியா இறந்த நிலையில், கடந்த 20.06.2018 ஆம் தேதி இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கனது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மதீஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு, நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

வீடியோஸ்


விருதுநகர்