விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங் போர்டில் அரசுக்கு சொந்தமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 2000 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மேலும் மதுரை, தேனி, சங்கரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவிகள் இகு வந்து தங்கி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கல்லூரியில் தங்கும் விடுதி வசதி இல்லாததால் அருகிலுள்ள சாட்சியாபுரத்தில் உள்ள ஆதி திராவிட நலத் துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கி சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்
இந்த நிலையில் தங்களுக்கு போதுமான பாத்ரூம் வசதி மற்றும் இட வசதி இல்லை என்றும் மேலும் ஒரே அறையில் அதிகம் பேர் தங்குவதால் தங்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இது சம்மந்தமாக ஆதிதிராவிட நலத்துறை இயக்குனரிடம் பலமுறை பு கார் மனு அளித்தும் அவர் அந்தப் புகாரை உதாசினபடுத்துவதாகவும், மேலும் தங்களை கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனால் தங்களுக்கு உரிய தங்குமிட வசதி செய்து தர வேண்டும் என்று கூறி அரசு மற்றும் கலைக் கல்லூரியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.