ஸ்ரீவி: பிரதோஷ விழா. சதுரகிரில் குவிந்து பக்தர்கள் கூட்டம்...

75பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவில் அதிகாலை முதலே குவிந்த பக்தர்கள் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உள்ள இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் விழா அதிவிமர்ச்சியாக நடைபெறும். இங்கு நடைபெறும் பிரதோஷ விழாவிற்கு தமிழக முழுவதும் பக்தர்கள் வருவது வழக்கம். விடுமுறை நாளான இன்று ஆண், பெண் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அதிகமாக காணப்படுகிறது. மேலும் வரும் செவ்வாய் கிழமை (17. 9. 2024) அன்று அரசு விடுமுறை என்பதால் பெளர்ணமி பூஜைக்கு சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 15. 9. 2024 ஆம் தேதி முதல் வரும் 18. 9. 2024 ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சதுரகிரி கோவிலுக்கு காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி