ஸ்ரீவி: 108ஆம்புலன்ஸில் பிறந்த பெண்குழந்தை. தாயும், சேயும் நலம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை தாயும், சேயும் நலம். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டைமலை அருகிலுள்ள நரிக்குறவர் காலணியில் சின்னத்துரை என்பவரது மனைவி துளசி( 25 ) நிறைமாத கர்ப்பிணி ஆன இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவமனை வரும் வழியிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் பெண் மருத்துவ உதவியாளர் சங்கீதாமுத்து , கர்ப்பிணி துளசிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.