சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4நாட்கள் அனுமதி

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் நடைபெறும் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பெளர்ணமியை  முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு கோயிலுக்கு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சதுரகிரி கோவிலுக்கு காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை எனவும், நீரோடைகளில் குளிக்க அனுமதி இல்லை எனவும் வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளது.

தொடர்புடைய செய்தி