ஸ்ரீவில்லிபுத்துார்: 5 பேருக்கு அபராதம் விதித்த வனத்துறை...

60பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காட்டுப்பன்றி இறைச்சி வைத்திருந்த 5 பேருக்கு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறை.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மம்சாபுரம் ஒற்றன்குளம் கண்மாய் பகுதியில் இருந்த 5 பேரை சோதனை செய்த போது, அவர்களிடம் காட்டுப்பன்றி இறைச்சி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்து மம்சாபுரத்தை சேர்ந்த சுந்தர்(29), பால்ராஜ்(56), ஆனந்தகுமார்(28), தர்மராஜ்(49), ராஜபாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன்(34) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 5 பேருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி