ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

சாத்தூர்: தவெக சார்பில் அஞ்சலை அம்மாள் நினைவு தின நிகழ்ச்சி..

சாத்தூரில் தவெக சார்பில் விடுதலைப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தமிழக வெற்றி கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் மற்றும் சாத்தூர் நகர கழகம் சார்பில் விடுதலைப் போராட்ட வீராங்கனை மற்றும் சமூகம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவரும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களுள் ஒருவருமான அஞ்சலை அம்மாள் அவர்களின் 61வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் சின்னப்பர் கலந்துகொண்டு அஞ்சலை அம்மாள் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நகரம் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

வீடியோஸ்


விருதுநகர்