ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: வருவாய் அமைச்சரின் வழக்கு டிச. 6ஆம் தேதி ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் டிச. , 6க்கு ஒத்தி வைத்தது. 2006 - 2011 ஆண்டு தி. மு. க. , ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு சாத்தூர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார். ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்து மீண்டும் வழக்குகளை முதன்மை மாவட்ட நீதிமன்றம் மறு விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டில்லி உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பில் இடைக்கால தடை உத்தரவு வாங்கப்பட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது டிச. , 6க்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

வீடியோஸ்


விருதுநகர்
Nov 09, 2024, 17:11 IST/விருதுநகர்
விருதுநகர்

விருதுநகர்: முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த கட்சியினர்

Nov 09, 2024, 17:11 IST
விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ. 9) விருதுநகர் வந்தார். அவருக்கு விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை - விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திமுகவினர் சாலை ஓரத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.