உடுமலைபேட்டை - Udumalaipettai

உடுமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேருந்து நிலையத்திலிருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  உடுமலை போக்குவரத்துத் துறை, உடுமலை போக்குவரத்துக் காவல்துறை, எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை, அரசு கலைக் கல்லூரி நாட்டுப்பணித் திட்டம், வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுப்பணித் திட்டம் இணைந்து நடைபெற்றது. உடுமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கொடியசைத்து பேரணியைத் துவக்கிவைத்தார்.  இப்பேரணியில் உடுமலை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, உடுமலை போக்குவரத்து உதவிக் காவல் ஆய்வாளர் கண்ணன், எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ். ஏ. ஐ. நெல்சன், மற்றும் விவேகானந்தா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் செ. மூர்த்தி, நாட்டுப்பணித் திட்ட அலுவலர் முனைவர் குமரவடிவேல், முனைவர் கவிதா, முனைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் இப்பேரணி உடுமலைப் பேருந்து நிலையம் கால்நடை மருத்துவமனையிலிருந்து தொடங்கி பொள்ளாச்சி சாலை வழியாகச் சென்று தளிசாலையை அடைந்து குட்டைத்திடலில் நிறைவுற்றது.  இப்பேரணியில் கல்லூரியின் நாட்டுப்பணித்திட்ட மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். உடன் நாட்டுப்பணித் திட்ட அதிகாரிகளும், கல்லூரி ஆசிரியர்களும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


కామారెడ్డి జిల్లా