உடுமலை மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மணி என்கிற சண்முகசுந்தரம் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 110 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் இந்திரா சுந்தரம், செயலாளர் ராஜா முகமது வழங்கினார். 

அப்போது உடுமலை மடத்துக்குளம் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 110 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அனைவருக்கும் தேவையான அரிசி பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் மற்றும் சேலை, சட்டை வழங்கப்பட்டது. மதிய உணவாக அனைவருக்கும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் திவ்யா, விஜயலட்சுமி சித்ரா, யாசின், ஓருங்கிணைப்பாளர் ஜானகிராம் எஸ். எம். நாகராஜ் மற்றும் சத்யம் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி