உடுமலை: திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பு

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணையில் தண்ணீர் நிரப்பி பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருமூர்த்தி அணை திட்ட பாசன குழு கோரிக்கையை ஏற்று, 3-ம் மண்டல பாசனத்திற்கு 29ஆம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் ஆனது இன்று திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் 29ஆம் தேதி பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும் நிலையில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி