இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட T20 போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று (ஜன.25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது T20 போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. 166 ரன்கள் எடுத்தால் இந்திய அணி வெற்றி பெறும். வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.