திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியுடன் வருவாய் கிராமம் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்காதை கண்டித்து அனைத்து கட்சியினர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கணக்கம்பாளையம் ஊராட்சி உடுமலை நகராட்சி இணைக்க வேண்டும் என்பது குறித்து தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் தலைவருக்கு மனு அனுப்புவது, கிராமசபை கூட்டத்தில் மனு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொடர் போராட்டங்கள் நடத்துவதும் முடிவு செய்யப்பட்டது.