

உடுமலையில் சிபிஐஎம் கட்சி சார்பில் கருத்தரங்கம்
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐஎம்) சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசும் போழுது, விவசாயிகள், மீனவர்கள், மொழிப் பிரச்சினை, ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், கல்விக்கு நிதி என ஒவ்வொன்றுக்கும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுகிறார். இதனால் எந்தப் பலனும் இல்லை. எனவே, மத்திய அரசு காலதாமதமில்லாமல் தமிழக அரசுக்குத் தேவையான நிதியை அளிக்க வேண்டும் என பேசினார். திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தன், மாநிலக் குழு உறுப்பினர் ரமலான், மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மது சூதனன், நகரச் செயலாளர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.