திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திருமூர்த்தி அணை மற்றும் அமராவதி அணை ஆதாரமாகக் கொண்டு மக்காச்சோளம் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தற்போழுது மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு நடவு உரம் மருந்து ஆட்கொலையான 50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்திருக்கும் நிலையில் தற்போழுது மகசூல் மெதுவாக குறைந்துள்ளது. ஏக்கருக்கு 50 மூட்டை கிடைத்த வந்த நிலையில் தற்போழுது 20 மூட்டை மட்டுமே கிடைத்து வருகின்றது.
மேலும் இடைத்தரகர்கள் ஆதிக்கும் காரணமாக ஒரு குவிண்டால் 2,100 க்கு விற்பனையாவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டமாகி வருவதால் தமிழக அரசு ஆதார விலையாக மக்காச்சோளம் குவிண்டால் 3000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
மேலும் தற்போது மக்காச்சோளம் காயவைக்க கிராமங்களில் போதிய உலர்களங்கள் இல்லாத காரணத்தால் பொள்ளாச்சி திண்டுக்கல் வரையிலான நான்கு சாலையில் பணிகள் முடிவு பெற பகுதியில் காய வைக்கும் நிலை உள்ளது. எனவே கிராமங்கள் தோறும் மக்காச்சோளம் காய வைக்க உலர்களங்களை அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.