திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தீபாலபட்டி பகுதியில் விவசாயி ரமேஷ் குமார் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் தற்போழுது மக்காச்சோளம் அறுவடை செய்யும் தருவாயில் காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக உள்ளே போகின்றன. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. வனத் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி தெரிவித்தார்.