திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரும் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தாராபுரம் சாலையில் இந்திரா நகர் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி சில வருடங்களாக மெதுவாக நடைபெற்று வந்தது.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வாகன ஓட்டுநர்கள் பணிகளை விரைவாக முடிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.