திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி அரசு கலைக்கல்லூரியில் மாணவ மாணவிகளிடம் 15வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று (25.01.2025) வாக்களிப்பதே சிறந்தது நிச்சயம் வாக்களிப்பேன் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் குமார் அவர்களால் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. உடுமலைப்பேட்டை வட்டாட்சியர், கல்லூரி முதல்வர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.