திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ரயில்வே லைன் அதாவது ரயில்வே தண்டவாளத்திற்கு தெற்கே உள்ள ரயில்வேக்கு சொந்தமான காலி இடத்தை சுத்தம் செய்து வேலி அமைக்க போவதாக கூறப்படுகிறது. வேலி அமைத்தால் தெற்கே உள்ள ராமசாமி நகர் அதை சுற்றியுள்ள இடத்தில் உள்ளவர்கள் ரயில்வே கேட்டை தாண்டி வடபுறம் செல்ல தடை ஏற்படும். ஆகவே வேலி அமைப்பதற்கு முன் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி சேர்மன் மத்தீன் நகராட்சி கமிஷனர் தலையிட்டு ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.