திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையத்துக்கு திரும்ப நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திருப்பூர் பேருந்துகள் நிற்கும் இடம் மற்றும் அமராவதி அணை, திருமூர்த்தி அணை செல்லும் பேருந்துகளுக்கும் இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் அமர்வதற்கு இடம் இல்லாமல் இருக்கும் நிலை உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.