திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி குறைந்த நிலையில் சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளனர். மனுவில் எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளத்தில் தேவை அதிகரிப்பதால் நடப்பு அறுவடை பருவத்தில் ஒரு குவிண்டால் 3 ஆயிரத்திற்கும் மேல் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் ஆனால் தற்போழுது ஒரு குவிண்டால் 2300க்கு விற்பனை ஆகின்றதுoth.
உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை குறைவு விவசாயிகளிடையே கடுமையாக பாதிக்கும் எனவே மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து உரிய விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.