உடுமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்கம்

72பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு தாய்த்தமிழ் காத்த போராளிகளின் திருவுருவ படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீர வணக்கம் செய்யும் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் த. சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

அப்போது தாய் தமிழ் காத்த போராளிகளுக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு மையம் மாநில துணைச் செயலாளர் கு. விடுதலைமணி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பொன்னீஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டி பாபு, உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார், இஸ்லாமிய ஜனநாயக பேரவை இப்ராஹிம் அலி, உடுமலை நகரப் பொருளாளர் நாகூர் கனி, உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல், புக்குளம் மணிகண்டன், மடத்துக்குளம் சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி