சென்னை பல்லாவரத்தில் திமுக சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியவர். அப்போது, பல்கலைக்கழகங்களை மாநில அரசிடமிருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க, கழக மாணவரணி சார்பில் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என கூறினார். மேலும், ஒற்றை மொழி, ஒற்றை ஆட்சி இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என கடுமையாக சாடினார்.