திருப்பூர் மாவட்டம் உடுமலையில் டிஎஸ்பி அலுவலகம் கபூர்கான் வீதியில் உள்ளது. இந்த நிலையில் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தற்போழுது விஷச் செடிகள் அதிக அளவு புதர் மண்டி காணப்படுகின்றன. இதனால் இரவு மற்றும் பகல் நேரத்தில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் அலுவலகம் முன் உள்ள விஷச்செடிகளை அகற்றவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.