
துறையூர்- ராமேஸ்வரம், அரசு பேருந்தை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.
துறையூரிலிருந்து ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய அரசு பேருந்தை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பகுதிகளுக்கு துறையூரில் இருந்து பேருந்து இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது அதை தொடர்ந்து இன்று புதிதாக இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகளையும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.