திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரின் அறிவுரைத்தலின்படி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை தாங்களாகவே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் ஒரு வாரத்திற்குள் அகற்றாவிட்டால் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்படும் அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும் இவ்வாறு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.