வருகிற 09.04.2025 சமரச தினத்தை முன்னிட்டு துறையூர் நீதிமன்றத்தில் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சமரசம் மையம் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று காலை சார்பு நீதிபதி எம் ஜெயசங்கர் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர் சத்தியமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சார்பு நீதிபதி சமரச தீர்வு மையத்தின் செயல்பாடு மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் அதனை வழக்கறிஞர் பெருமக்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான சட்ட ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் சமரச தீர்வு மையத்தின் உறுப்பினரும் வழக்கறிஞருமான சுரேஷ்குமார், மனோகரன், கேசவன் ஆகியோர் சமரச தீர்வு மையம் பற்றி விளக்கம் அளித்தனர். இந்நிகழ்வில் வழக்கறிஞர் சங்க தலைவர் உத்திராபதி, செயலாளர் சசிகுமார் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் சந்திரமோகன், சபாபதி, ஜெயராஜ் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்கு பெற்று நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர் சத்தியமூர்த்தி அவர்கள் நன்றி தெரிவித்தார்.