தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல் 7) புதுக்கோட்டை, திருவாரூர், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம், திருவாரூரில் ஆழித் தேரோட்டம் விழா கொண்டாட்டத்தின் காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டது. தென்காசியில் காசிவிஸ்வநாதர் கோயில் திருவிழாவையொட்டி ஏப்.7, 11ல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் நாளை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.