கர்நாடகா: பெங்களூருவில் அடையாளம் தெரியாத நபரால் இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3-ம் தேதி பி.டி.எம் லேஅவுட் பகுதியில் ஒரு குறுகிய தெருவில் இரு இளம்பெண்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த இளைஞர், இரு பெண்களில் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடினார். பாதிக்கப்பட்ட பெண் புகாரளிக்காததை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.