பழநி பகுதியில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு இளம்புழு வளர்ப்பு மையத்தால் வழங்கப்பட்ட புழுக்கள் அனைத்தும் நோய் வாய்ப்பட்டு உயிரிழந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து பட்டுப்புழுக்களை தீயிட்டு எரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘இளம்புழு வளர்ப்பில் ஈடுபட்ட 15 நாட்களுக்குள் பட்டுப்புழுக்கள் அனைத்தும் கூடு கட்ட வேண்டும். ஆனால் தற்போது 13 நாட்கள் ஆகியும் புழுக்கள் இலையை எடுத்து கொள்ளவும் இல்லை. கூடு கட்டவும் இல்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.