சட்டப்பேரவையில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் கேள்வி

61பார்த்தது
இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் அவர்கள் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட முருங்கபட்டி மற்றும் பச்சபெருமாள்பட்டி ஆகிய அரசு பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் மற்றும் சேனப்பநல்லூர் அரசு பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இவ்வருடம் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆயிரம் கோடி நிதியில் ஸ்டாலின் குமார் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என பதிலளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி