ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை, காந்தி கலை மன்றம், சத்திரப்பட்டி சாலை உள்ளிட்ட பகுதியில் நடந்து சென்ற நபர்களை தெரு நாய்கள் திடீரென விரட்டி, விரட்டி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் 30 பேர், நேற்று 34 பேர் என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ராஜபாளையம் சுற்றுவட்டாரத்தில் 80 பேரை நாய் கடித்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.