நடப்பு ஐபிஎல் சீசனில் CSK அணியின் தொடர் தோல்விகள் குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறும்போது, "CSK அணியில் உள்ள பேட்டர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்வதில்லை, இதுபோன்ற அணுகுமுறை வியப்பாக இருக்கிறது. ஒருமுறை அல்ல இருமுறை அந்த அணியின் வீரர்கள் மோசமாக ஆடி விரைவாக விக்கெட்டுகளை இழந்துள்ளது நல்ல அறிகுறியல்ல. CSK அணி இந்த சீசனில் பல வீரர்களை மாற்றிப் பயன்படுத்தியும் பலன் தரவில்லை” என்றார்.