கோடை மழை பொழியும் போது உண்ணும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அது நன்கு சமைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.வெயில் சுட்டெரித்த நிலையில் இருந்து ஈரப்பதமான சூழலுக்கு மாறுவதால் காற்று மூலம் கலக்கும் மாசுக்கள் உணவில் படியக்கூடும். அதனுடன் அதிக ஈரப்பதமான சூழலும் சேர்ந்து உணவு கெட்டுப்போக வழிவகுப்பதால் உணவு விஷத்தன்மைக்கு மாறும் வாய்ப்புகள் அதிகமாகிறது.