பாக்கெட் பாலை கொதிக்க வைக்காமல் குடிக்கலாமா? கூடாதா?
பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பாலை காய்ச்ச வேண்டும் என அவசியம் இல்லை என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். காரணம், பதப்படுத்தப்படும் போதே அந்த பாலை போதுமான அளவுக்கு வெப்பமாக்கி, கிருமிகளை கொள்ளும் வழிமுறைகளை தயாரிப்பாளர்கள் செய்திருப்பார்கள். எனவே, பதப்படுத்தப்பட்ட பாலை நீங்கள் கிருமிகளை கொல்வதற்காக காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை என்கின்றனர் வல்லுநர்கள். பதப்படுத்தப்படாத பாக்கெட் பாலை கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.