இடிந்து விழுந்த கட்டடம்.. நூலிழையில் உயிர்தப்பிய சிறுவர்கள் (வீடியோ)

56பார்த்தது
உ.பி மீரட் நகரில் சதார் பஜார் பகுதியில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்தபோது அவ்வழியாக வந்த 2 சிறுவர்கள் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 முதல் 150 வருட பழமையான கட்டடம் சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்நிலையில், 6-7 வயது மதிக்கத்தக்க 2 சிறுவர்கள் அந்த கட்டடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து வந்தனர். அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி