சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குப் பின்பும் டீ, காபி அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இந்த டான்னின்ஸினால் உணவில் இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் உறிஞ்சப்படாமல் தடைப்படும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படலாம். இது தொடர்பான தகவலை தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) வெளியிட்டுள்ளது.