நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தருமபுரியில் நடைபெற்ற தவெக ஆலோசனை கூட்டத்தில் பேசிய தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், "மாநாட்டிற்கு குடும்பத்தோடு வரவேண்டும். தொண்டர்கள் வாகனங்களில் அமைதியான முறையில் ஒழுக்க கட்டுப்பாட்டோடு வரவேண்டும். இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும்" என கூறியுள்ளார்.