சீர்காழி - Sirklai

மயிலாடுதுறை விவசாயிகள் அமைச்சரிடம் புகார் மனு

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் விவசாயிகள் நேற்று(செப்.11) புகார் மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 980 ஹெக்டேர் சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தும், இதுநாள் வரை வழங்கவில்லை. பயிர் காப்பீட்டு நிறுவனம் 2023-2024ஆம் ஆண்டுகளுக்கு 16 கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவு காப்பீடு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர். எனவே மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
ITI முடித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் அரசு வேலை
Sep 12, 2024, 11:09 IST/

ITI முடித்தவர்களுக்கு ரூ.14,000 சம்பளத்தில் அரசு வேலை

Sep 12, 2024, 11:09 IST
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 500 * கல்வி தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் * ஊதிய விவரம்: ரூ.14,000 * தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் முகாமில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.