

ஆபத்தான முறையில் ரயில்வே பாதையை கடக்கும் போது மக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை அருகே உள்ள ரயில்வே கேட்டை பொதுமக்கள் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர். மயிலாடுதுறை சந்திப்பு அருகே உள்ளதால் அங்கு உள்ள கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நேர விரையும் அடைவதால் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்த தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.