வேளாண் விரிவாக்க மையத்தில் இன்றுமுதல் பணமில்லா பரிவா்த்தனை

82பார்த்தது
வேளாண் விரிவாக்க மையத்தில் இன்றுமுதல் பணமில்லா பரிவா்த்தனை
சீா்காழி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் திங்கள்கிழமை (செப். 9) முதல் பணமில்லா பரிவா்த்தனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீா்காழி வேளாண்மை உதவி இயக்குநா் க. ராஜராஜன் வெளியிட்ட அறிக்கை:

சீா்காழி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில்

பணமில்லா பரிவா்த்தனை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் போஸ் இயந்திரம் மூலம் மட்டுமே வேளாண் இடுபொருட்களுக்கு பணம் செலுத்தவேண்டும்.

எனவே, இடுபொருட்கள் வாங்கவரும் விவசாயிகள் அவசியம் ஏ. டி. எம். டெபிட் காா்டை கொண்டுவர வேண்டும் அல்லது கியூஆா் கோடு மூலம் மட்டுமே தொகை செலுத்த வேண்டும்.

பணமில்லா பரிவா்த்தனையானது திங்கள்கிழமை (செப். 9) முதல் நடைமுறைக்கு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி