சீர்காழி - Sirklai

மயிலாடுதுறை விவசாயிகள் அமைச்சரிடம் புகார் மனு

மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் விவசாயிகள் நேற்று(செப்.11) புகார் மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட 980 ஹெக்டேர் சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி நிவாரணம் வழங்குவதாக அறிவித்தும், இதுநாள் வரை வழங்கவில்லை. பயிர் காப்பீட்டு நிறுவனம் 2023-2024ஆம் ஆண்டுகளுக்கு 16 கிராமங்களுக்கு மட்டும் குறைந்த அளவு காப்பீடு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டினர். எனவே மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Sep 12, 2024, 17:09 IST/வேதாரண்யம்
வேதாரண்யம்

மூடப்பட்ட மதுபானக் கடை மதுப் பிரியர்களின் மிரட்டலால் திறப்பு

Sep 12, 2024, 17:09 IST
வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் முற்றுகை போராட்டத்தால் மூடப்பட்ட மதுபானக் கடை மதுப் பிரியர்களின் மிரட்டலால் திறக்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்பிற்கு அருகே இருக்கும் மதுபானக் கடையை அகற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணியினரால் முற்றுகை போராட்டம் மதியம் முதல் நடைபெற்ற நிலையில் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தற்காலிகமாக மதுப்பானக்கடை மூடப்படும் என்று முடிவு எட்டப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டக் குழுவினர் சென்ற நிலையில் , மதுபிரியர்கள் உடனடியாக மதுபானக் கடை திறக்க வேண்டும் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மதுபானக் கடை திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் காலையிலிருந்து நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியினரின் முற்றுகை போராட்டம் பயனற்று போனது.