மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு மற்றும் இருபதாவது வார்டு போன்ற வார்டுகளில் சுற்றி தெரியும் நாய்களால் இரவு நேரத்தில் விளையாடும் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி செல்கின்றன. இதனால் இரவில் வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடந்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.