மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட நக்கம்பாடி பகுதியில் இன்று கொத்தங்குடியில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நக்கம்பாடி பகுதிக்கு வந்த போது மின் கம்பியில் உரசி லாரி முழுதுவதும் தீப்பிடித்து எரிந்த சேதமானது. உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.