நாகை: பெண் குழந்தைகளை காக்க இருசக்கர வாகன பேரணி
நாகையில் பெண் குழந்தைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் முருகேசன் தொடங்கி வைத்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பாக பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி இருசக்கர விழிப்புணா்வு பேரணி நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி நாகை கடை வீதி, வேளாங்கண்ணி, வேட்டைகாரனியிருப்பு வழியாக வேதாரண்யம் இராஜாஜி பூங்காவில் நிறைவடைந்தது. இப்பேரணியில் 90 மகளிா் சுயஉதவி குழு உறுப்பினா்களை சோ்ந்தவா்கள், பெண் குழந்தைகளை காப்போம்! மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்! தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து பேரணியை கொடியசைத்து மகளிா் திட்ட அலுவலா் முருகேசன் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமன், மாவட்ட சமூகநல அலுவலா் திவ்யபிரபா, மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், வட்டார இயக்க மேலாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனர்.