ஒரு தரப்பு மீனவர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு;

64பார்த்தது
சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் கருத்தை கேட்டு கோவில் திருவிழாவை நடத்த வேண்டுமென பட்டினச்சேரியை சேர்ந்த ஒரு தரப்பு மீனவர்கள் எஸ்பி அலுவலகத்தில் மனு;



நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பஞ்சாயத்து கணக்கு வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல் காரணமாக பட்டினச்சேரியில் இருதரப்பாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு தரப்பினரின் மற்றொரு தரப்பினரின் கருத்தை கேட்காமல், தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அக்டோபர் 2- ந்தேதி பட்டினச்சேரி சீராளம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை நடத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் , இடையே சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இருதரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, அனைவரது பங்களிப்புடன் சீராளம்மன் கோவில் நவராத்திரி திருவிழாவை நடத்த வேண்டுமென ஒரு தரப்பைச் சேர்ந்த மீனவர்கள் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி