நாகையில் நடந்த விவசாயிகள் குறைத்தீர் கூட்டத்தில் வாட்ஸ்ஆப்பில் மூழ்கிய அதிகாரிகள் ; விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் பேசும்போது செல்போனில் மூழ்கிய அதிகாரிகளால் முகம்சுளித்த விவசாயிகள்.
நாகப்பட்டினம் எ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அதற்கு பதிலளித்து வந்தார். அப்போது விவசாயிகளின் குறைகளை குறிப்பெடுத்து அதனை நிவர்த்தி செய்யவேண்டிய அதிகாரிகள் செல்போனில் மூழ்கி இருந்தது விவசாயிகள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தியது. தங்களுக்கும் அந்த கூட்டத்திற்கும் சம்மந்தமே இல்லாதவாறு , வேளாண்துறை , தீயணைப்புத்துறை அதிகாரிகள் வாட்ஸ்ஆப்பில் மூழ்கியபடியும், செல்போன் பேசிவாரும் இருந்தனர். எனவே கூட்டத்தில் தங்களது குறைகளை மதிக்காமல் நடந்துகொள்ளும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.