திட்டச்சேரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

82பார்த்தது
திட்டச்சேரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1 -வது வார்டு தைக்கால் தெரு, 15-வது வார்டு வெள்ளத்திடலில் திட்டச்சேரி போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்.

இதில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசிக் கொண்டு வாகன ஓட்டக்கூடாது, பஸ் படிகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், மோகன், தலைமை காவலர் கதிரவன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி